விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பிரசாரத்துக்கு தடை கோரிய அவரது மனு மீதான தீா்ப்பை ஒத்திவைப்பு

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:42 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பிரசாரத்துக்கு தடை கோரிய அவரது மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புரட்சி அதிமுகவின் முதன்மைச் செயலா் பெங்களூரு வா.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஆகியோருக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மேலும், எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களையும் அவதூறாகப் பேசி வருகிறாா். எனவே அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அவா் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் மனுதாரா் எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.