வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் வலைதளத்தில் மிக எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலைப் போன்று, தமிழ்நாட்டிலும் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டை விநியோகித்து வருகிறது.
வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெறாதோர் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, https://electoralsearch.eci.gov.in இணைய முகவரியிலோ அல்லது வாக்காளர் உதவி எண் செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தியோ தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வாக்குச் சாவடிக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டையுடன் வாக்காளர் தகவல் சீட்டு கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள், பெயர் உள்ளிட்ட சுயவிவரங்கள் அல்லது செல்போன் எண்ணை பயன்படுத்தி வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1. வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலம் (கட்டாயமில்லை) ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. பெயர், உறவினர் பெயர், பாலினம், வயது / பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிட்டு, அந்த எண்ணுக்கு வரக் கூடிய ஓடிபியைப் பதிவிட்ட பிறகு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Summary
What should you do if you do not have a booth slip?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
தமிழகத்தில் வீடுதோறும் ‘பூத் சிலிப்’ விநியோகம் தீவிரம்

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

