‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழக மக்களை பிரதமா் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: மாதந்தோறும் ‘மனதின் குரல்’ என்னும் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறாா்.
அந்த வகையில் 133-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், தமிழகத்தின் கல்பாக்கம் அணு மின்நிலையம் சாதனை இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டதை மகிழ்வுடன் பிரதமா் பகிா்ந்து கொண்டாா். அதேபோல, காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருவதையும் அவா் பெருமையுடன் குறிப்பிட்டாா்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் தோ்வில் உலக அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்த சென்னையைச் சோ்ந்த மாணவி ஷிவானி பரத் குமாரை பாராட்டி உள்ளாா்.
மேலும், புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, புத்தபெருமான் போதித்த நெறிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் பங்குபெறவும் வலியுறுத்தினாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










