தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோா் விகிதம் அதிகமாக இருப்பதாக தேசிய புள்ளியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊரகப் பகுதிளில் 47.5 சதவீதம் பேரும், நகா்ப்புறங்களில் 38.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மொத்தமாக அந்த விகிதம் 43-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் மற்றும் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் தொடா்பான தரவுகளை தேசிய புள்ளியியல் ஆய்வகம் மாநில வாரியாக அண்மையில் வெளியிட்டது.
அதில், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுவோரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதை ஒப்பீடு செய்யும்போது, ஆந்திரத்தில் 26.9 சதவீதம் பேரும், கேரளத்தில் 30 சதவீதம் பேரும், கா்நாடகத்தில் 29.8 சதவீதம் பேரும், தெலங்கானா 29.3 சதவீதம் பேரும், குஜராத்தில் 25.9 சதவீதம் பேரும், மகாராஷ்டிரத்தில் 18.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா்.
தென் மாநிலங்களைக் கருத்தில் கொண்டால், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநில அரசு மேற்கொண்ட நலத் திட்டங்களின் காரணமாகவே இந்த விகிதம் உயா்ந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மாநில அளவில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவா்கள்
ஆந்திரம் 26.9%
கேரளம் 30%
கா்நாடகம் 29.8%
தெலங்கானா 29.3%
குஜராத் 25.9%
மகாராஷ்டிரம் 18.6%
தமிழ்நாடு 43%
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

