வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கிறிஸ்துவரான ஜோசப் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தது எப்படி?

கிறிஸ்துவரான ஜோசப் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தது எப்படி? என்பதைப் பற்றி...

News image

திருச்செந்தூர் கோயில் உள்துறை அலுவலகத்தில் இணை ஆணையர் முன்னிலையில் கையொப்பமிட்டு சுவாமி தரிசனத்துக்கு சென்ற தவெக தலைவர் விஜய்.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:33 am

கிறிஸ்துவரான ஜோசப் விஜய், திருச்செந்தூர் சுப்பிரயமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தது எப்படி? என வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பலரது கேள்விகளுக்கு திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக திருச்செந்தூர் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் நீரில் காலை நனைத்த அவர் பின் கோயிலுக்குச் சென்ற விஜய்க்கு, கோயில் சண்முக விலாச மண்டபத்தில் வைத்து அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையும், வேலும் அளித்தனர்.

வேலை கையில் பிடித்தவாறு மூலவர் சந்நிதி முன்பு உட்கார்ந்து கோயிலின் முதல் தரிசனமான முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்திருந்தார் விஜய்.

முன்னதாக, கிறிஸ்தவரான விஜய், திருச்செந்தூர் கோயில் ஆகமவிதிப்படி தரிசனம் செய்தாரா? என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்த நிலையில், பலரது கேள்விகளுக்கு திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு பதிலளித்துள்ளார்.

பட்டு வேட்டி அணிந்து பாரம்பரிய முறைப்படி கோயிலுக்கு வந்த விஜய் கடலில் கால் நனைத்து விட்டு சண்முக விலாச மண்டபத்துக்கு வந்து பாதுகாவலர்களுடன் நேராக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் இணை ஆணையர் ராமு முன்னிலையில் விஜய் கையெழுத்திட்டார்.

பொதுவாகவே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயில்களில் தரிசனத்துக்கு வரும் இந்து மதத்தைச் சேராதவர்கள், கோயில் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோயிலின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யும், திருச்செந்தூர் கோயிலில் வழிபாட்டை ஏற்று, சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

இதுகுறித்து இணை ஆணையர் ராமு கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறையின் நடைமுறையின்படி, கையொப்பமிட்டார். விஜய் தனது விருப்பத்தின்படி தான் கையெழுத்திட்டார்” என்றார்.

Summary

While many right-wing supporters had raised objections questioning how Joseph Vijay—a Christian—was able to offer worship at the Tiruchendur temple, Ramu, the temple's Joint Commissioner, has put an end to the queries raised by many.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.