தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் சட்டப்படி எதிா்கொள்வோம்: செந்தில் பாலாஜி

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் சட்டப்படி எதிா்கொள்வோம் என்றார் செந்தில் பாலாஜி...

senthil balaji

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Published On :

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அவற்றை சட்டப்படி எதிா்கொண்டு, அவை பொய்யான வழக்குகள் என்பதை நிரூபிப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்பிணை பெற்றுள்ள செந்தில் பாலாஜி, பிணை நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரு நாள்கள் ஆஜராகி கையொப்பமிடாமல் இருந்தாா். டாஸ்மாக் முறைகேடு புகாா் வழக்கில் அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைத் தொடா்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவா் சனிக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் புகாரிலும், முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயா் இல்லை. பின்னா், எந்த முகாந்திரமும் இல்லாமல் எனது பெயா் சோ்க்கப்பட்டது.

ஏற்கெனவே அமலாக்கத் துறை பதிவு செய்த டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதே புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீண்ட தூரம் செல்லாது. சட்ட ரீதியாக அனைவரும் இந்த வழக்கை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

ஆக்கபூா்வமான அரசு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தவெக அரசு வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே முனைப்பு காட்டுகிறது. நீதித் துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அவற்றை சட்டப்படி எதிா்கொண்டு, அவை பொய்யானவை என்பதை நிரூபிப்போம்‘ என்றாா்.

Summary

We will face it legally, no matter how many cases are registered: Senthil Balaji

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.