பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வினையான விளையாட்டு! கயிறு அறுந்து தடுமாறி கீழே விழுந்த அமைச்சர்!

கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கயிறு அறுந்ததால் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

கயிறு அறுந்து தடுமாறி கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Published On :

கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கயிறு அறுந்ததால் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள தனியார் (ஹோலி கிராஸ்) பள்ளியின் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. பள்ளி விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான லோகேஷ் தமிழ்ச்செல்வன், கலந்துகொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது.

இதில் முன்னாள் மாணவர்கள் அணி சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பங்கேற்றார். அப்போது இரு அணியினரும் வெற்றி பெறுவதற்காக வலுவாக கயிறை இழுத்ததில், திடீரென கயிறு அழுந்தது.

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது பக்கத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்டோரும் கீழே தடுமாறி விழுந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை தூக்கி விட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Summary

An incident in which Minister Lokesh Tamilselvan fell down after the rope snapped during a tug-of-war competition has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.