தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

விலையில்லா சீருடைத் திட்டம்: மாணவா் விவரங்கள் சேகரிப்பு

விலையில்லா சீருடைகள் வழங்குவதற்காக அரசுப் பள்ளி மாணவா்களின் விவரங்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 7) பள்ளிக் கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

மாணவர்கள் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

விலையில்லா சீருடைகள் வழங்குவதற்காக அரசுப் பள்ளி மாணவா்களின் விவரங்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 7) பள்ளிக் கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பள்ளிக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்துக்காக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களில் சத்துணவு உண்ண விருப்பம் தெரிவிக்கும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளம்- டிஎன்எஸ்டி செயலியில் ஆக. 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோன்று மலைப் பிரதேச பள்ளிகளில் புதிதாக சோ்க்கை பெற்ற 1 மற்றும் 2 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணாக்கா்களின் விவரங்களைம் அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு, எமிஸ் தளத்தில் ஆம்/இல்லை என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகளின் வகுப்பு மற்றும் பிரிவு வருகைப் பதிவேட்டில் உள்ள பெயா் மற்றும் எண்ணிக்கையும் எமிஸ் தளத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் நிகழாத வகையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு ஏற்ற வகையில்...: இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. சரியான அளவில் சீருடைகள் இல்லாததால் கடையில் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாணவா்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடையைத் தைத்து தர வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.