பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் 200 -க்கும் மேற்பட்ட திமுகவினர், எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என அங்கு வந்த இருசக்கர வாகன ஓட்டி சொன்னதற்கு போலீசார் முன்னிலையில் திமுகவினர் அவரை சரமாரியாக தாக்கினர்.
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விடியோவைப் பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில்,
"பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள்.
பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. சட்டம் தன் கடமையை செய்யும்!" என்று பதிவிட்டுள்ளார்.
பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ தாà®à¯à®à¯à®®à¯ திமà¯à®à®µà®¿à®©à®°à¯!
— Rajmohan (@imrajmohan) August 4, 2026
à®®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à¯à®¯à¯à®±à®¾à® à®à®¾à®²à¯ மறியல௠à®à¯à®¯à¯à®¯ வà¯à®£à¯à®à®¾à®®à¯ à®à®©à®à¯ à®à¯à®±à®¿à®¯ à®à®°à¯à®à®à¯à®à®° வாà®à®© à®à®à¯à®à®¿à®¯à¯, திமà¯à®à®µà®¿à®©à®°à¯ à®à®°à®®à®¾à®°à®¿à®¯à®¾à® தாà®à¯à®à¯à®®à¯ à®à®¾à®à¯à®à®¿ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿ à®à®³à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯!
à®à®à¯à®¤à¯à®¤à®à¯à®¤à¯à®¤à¯ பà¯à®£à¯à®à®³à¯ தரà®à¯à®à¯à®±à¯à®µà®¾à® பà¯à®à®¿ வநà¯à®¤ திமà¯à®à®µà®¿à®©à®°à¯ தறà¯à®ªà¯à®¤à¯ வனà¯à®®à¯à®±à¯à®¯à¯ à®à¯à®¯à®¿à®²à¯ à®à®à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. பà¯à®à¯à®à®¿à®²à¯â¦ pic.twitter.com/xArFYrpZMk
Summary
Minister Rajmohan warning for assault on public by DMK members in Nellai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்கிய திமுகவினர்! வைரல் விடியோ

அரசுப் பள்ளி சத்துணவில் சிக்கன் பிரியாணி! அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!

சாலை என்பது போராடக்கூடிய இடமல்ல: அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan |
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




