ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி....

Police Inspector arrested for threatening a businessman with arrest in the Armstrong case

ஆம்ஸ்ட்ராங் | காவல் ஆய்வாளர் புகாரி - X

Published On :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கவைத்து விடுவேன் என தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் பணம் பறித்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் புகாரி. இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுன்ட்டர் செய்தவர். தற்போது இவர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சௌகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் குமார் புகார் அளித்துள்ளார்.

புகாரில் தன்னிடம் புகாரி என்ற காவல் ஆய்வாளர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க விடுத்து விடுவேன் என மிரட்டி தன்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காவல் ஆய்வாளர் புகாரி, பரங்கிமலையில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு காவல் ஆய்வாளரிடம் சென்னை கூடுதல் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விசாரணையில் காவல் ஆய்வாளர் புகாரி, அனில் குமாரிடம் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் காவல் ஆய்வாளரான புகாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி பலமணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக புகாரி பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Police Inspector arrested for threatening a businessman with arrest in the Armstrong case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.