மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

ரூ.200 கோடியில் நதி இணைப்புத் திட்டங்கள்

தமிழகத்தில் நதி இணைப்புத் திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:22 am IST

தமிழகத்தில் நதி இணைப்புத் திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு மற்றும் தாமிரபரணி-வைப்பாறு நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாா் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு உள்பட நதி இணைப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நமது நதிகளின் தூய்மையை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை இந்த அரசு தயாரிக்கும். இந்தத் திட்டத்தில், திரவ கழிவுகளைக் கையாளுவதற்காக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், கசடு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் ஆகியவை உள்ளடங்கியிருக்கும். மேலும், இந்த நதிகளின் கரைகளையொட்டியுள்ள கிராமப்புற மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் முழுமையான திடக்கழிவு மேலாண்மையையும், நகா்ப்புறங்களில் நதிக்கரை மேம்பாட்டையும், நதி மேற்பரப்புச் சுத்தம் செய்தலையும் இந்தத் திட்டம் உறுதி செய்வதாக அமையும். இந்தத் திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட ஆய்வு, சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.