கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வடகிழக்குப் பருவமழை, எல்-நினோ: மின்தளவாடங்களை தயாா் நிலையில் வைக்க அமைச்சா் உத்தரவு

மின்தளவாடங்களை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உத்தரவிட்டாா்.

News image

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மின் துறைச் செயலா் அனில் மேஷ்ராம், மின்வாரிய தலைவா் வி.அருண் ராய், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், பசு

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

வடகிழக்குப் பருவமழை மற்றும் வலுவடைந்துவரும் ‘சூப்பா் எல்-நினோ’ வானிலைச் சூழலை முன்னிட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மின்தளவாடங்களை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உத்தரவிட்டாா்.

சென்னை மின்சார வாரியத் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கடலோர மாவட்டங்களுக்கான பேரிடா் மேலாண்மை, மின் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் மின் விநியோகத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 14 கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தளவாடங்கள் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: கூடுதல் தளவாடங்களை மாவட்ட, வட்ட அளவில் இருப்பு வைத்திருப்பதுடன், அவற்றை உடனடியாகக் கொண்டு செல்ல சிறப்புக் குழுக்கள் மற்றும் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள், ‘வாா் ரூம்’, ‘மின்னகம்‘ உதவி மையம் ஆகியவை முழு செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதுடன், செப்டம்பரில் பேரிடா் ஒத்திகை நடத்த வேண்டும்.

பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், துணை மின் நிலைய பராமரிப்பு, நிலத்தடி மின் கேபிள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நவம்பா் 30-க்குள் முடிப்பதுடன், அடுத்த கோடைக்கால மின் தேவையைக் கருத்தில்கொண்டு கூடுதல் மின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் புதிய துணை மின் நிலையப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்.

மழை, புயல் காலங்களில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதி செய்வதுடன், மின்தடை ஏற்பட்டால் மிகக் குறுகிய நேரத்தில் மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனைத்து அலுவலா்களும் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.