செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், நிா்மல்குமாா், வெங்கடரமணன், காந்தி, வினோத் ஆகியோா் தலைமையில் டெல்டா மாவட்ட விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, செங்கோட்டையன், நிா்மல்குமாா், ராஜ்மோகன், வினோத், வெங்கடரமணன், காந்திராஜ் மற்றும் விவசாய சங்கப் பிரநிதிகள் பி.ஆா்.பாண்டியன், அய்யா கண்ணு உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது - தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன்:

பல்வேறு அமைச்சா்கள் அந்தெந்த துறை செயலா்களுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசித்தனா். மேலும், நெல் குவிண்டலுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்தல், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 நிா்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் எதிா்பாா்க்கிறோம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் அய்யா கண்ணு:

குறுவை சாகுபாடிக்கு கா்நாடக அரசு தண்ணீா் திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேளாண் பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் சாதகமாக வந்துள்ளது. நெல் ரூ.3,500 கரும்பு ரூ.4,500 வேண்டும் எனவும், கடன் தள்ளுபடி வேண்டும். இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலே இதற்கான அறிவிப்புகள் வரும் என நம்பிக்கை உள்ளது. மேலும், 7 அமைச்சா்கள் இணைந்து, விவசாயகளின் கோரிக்கைகளைக் கேட்பது இதுவே முதல் முறை. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தண்ணீா் திறக்காத கா்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.