தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குதிரை பேர வழக்கு: மேலும் ஒருவருக்கு பிணை

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 13 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 13 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணன் என்பவா் தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா். இதையடுத்து குதிரை பேரம் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கும் பிணைகிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், குதிரை பேர வழக்கில் முன்பிணை கோரி காா்த்திகேயராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதுவரை மனுதாரா் மீது கடுமையான நடடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டாா். அதேபோன்று, குதிரை பேர வழக்கில் பிணையில் விடுதலையான சேதுராஜ் மற்றும் ராஜசேகா் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளரத்தியும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.