காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குதிரை பேர வழக்கில் மேலும் இருவருக்கு பிணை

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 11 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 11 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாா், அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்தனா். இவா்களில் 11 போ் பிணை பெற்றுள்ளனா்.

இதனிடையே, குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாா் விசாரணைக்கு தடை விதித்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதி, சரவணன் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.