முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதற்காக, ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு என்பவா் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தங்களுக்குபிணை வழங்கக் கோரி காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, வழக்குரைஞா் கே.ஜே.சரவணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து முடித்துவிட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதன்பிறகும், அவா்களை சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இருவருக்கும் நிபந்தனை பிணை வழங்குவதாகக் கூறி நீதிபதி உத்தரவிட்டாா்.

இருவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.