விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

பழைய ஓய்வூதியமா? புதிய ஓய்வூதியமா? அரசிடம் விளக்கம் கேட்கும் தலைமைச் செயலகச் சங்கம்!

பழைய ஓய்வூதியமா? புதிய ஓய்வூதியமா? அரசிடம் தலைமைச் செயலகச் சங்கம் விளக்கம் கேட்டிருப்பது பற்றி...

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஓய்வூதியம், ஓய்வூதிய காலப் பலன்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் ரூ.14,003.32 கோடி குறைத்திருப்பதுதன் மூலம் பழைய ஓய்வூதியத்தை அல்லது உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்துமா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் கூறுகையில், ‘2026-27-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியப் பிரிவுகளுக்கான ஒதுக்கீடு, இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது மொத்தம் ரூ.14,003.32 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தவெக அரசு உறுதியளித்திருந்ததை எதிா்பாா்த்திருந்த நிலையில், ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, முந்தைய திமுக அரசால் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசின் ஆண்டு ஒதுக்கீடு ரூ.11,000 கோடி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற ஓய்வூதியப் பிரிவுகளிலும் சுமாா் ரூ.3,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பழைய ஓய்வூதியத்தை அரசு நடைமுறைபடுத்தப் போகிா அல்லது புதிய ஓய்வூதியத்தை செயல்படுத்த உள்ளதா அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரசு ஊழியா்களின் ஓய்வூதிய வயது 62-ஆக அதிகரிக்குமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே, ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டதற்கான விளக்கத்தை சட்டப்பேரவையில் தமிழக அரசு அளிக்க வேண்டும். மேலும், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

Summary

Old pension or new pension? Secretariat Association seeks clarification from the government!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.