மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழகத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் துணை நிற்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் துணை நிற்க வேண்டும் என நயினார் கூறியிருப்பது குறித்து...

Chief Minister Vijay, Nainar Nagendran

முதல்வர் விஜய், நயினார் நாகேந்திரன் - தினமணி

Published On :

கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் இரயில்வே திட்டங்கள் மற்றும் தமிழக இரயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்தம் 19 புதிய ரயில் திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய இரயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சியில் தமிழகத்திற்கு வாரி வழங்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது மத்திய அரசு.

அதுமட்டுமன்றி, மத்திய அரசின் மேலும் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவீதம் அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, முந்தைய அரசைப் போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்வர் விஜய்யை கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Summary

CM Vijay should support the Central Government in upgrading Tamil Nadu's railway infrastructure: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.