மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இ20 எரிபொருள் பற்றி விரிவான பிரசாரம் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு!

இ20 எரிபொருள் பற்றிய சமூக ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்னெடுப்பை மேற்கொள்கிறது.

இ20

Published On :

இ20 என்கிற எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவது, என்ஜின் தேய்மானம் மற்றும் நலன் சாா்ந்த முரண்பாடுகள் குறித்து புகார்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இ20 எரிபொருள் தொடர்பான கொள்கை பிரசாரங்களை சமூக ஊடகங்களில் விரிவாகப் பரப்புமாறு அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு மத்திய அரசும், பாஜக நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளன.

இந்தப் பிரசாரத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணையுமாறு கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இ20 எரிபொருள் மீதான நுகர்வோரின் புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்புவதற்கு பிரத்யேக காணொலிகள் உருவாக்கப்பட்டு கட்சியினர் மற்றும் அதிகாரிகளால் பகிரப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இ20 எரிபொருளை, அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படாத வாகனங்களில் பயன்படுத்துவதால், எரிபொருள் டேங்கில் உள்ள ரப்பர் பாகங்களை அது சேதப்படுத்த வாய்ப்பிருப்பதாக இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், உலோகப் பாகங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இ20 எரிபொருளால் புதிய வாகனங்களில் 1-2% வரையிலும், பழைய வாகனங்களில் 6% வரையிலும் மைலேஜ் குறையக்கூடும் என்றும், இதனால் காப்பீடு தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆளும் பாஜகவுக்கும், ஏதிர்க்கட்சியினருக்கும் இடையே பிரச்னைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதில், “இ20 எரிபொருளுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

Summary

The Central Government is taking the initiative to conduct social media campaigns regarding E20 fuel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.