/

எரிபொருள் நெருக்கடி குறித்து பரவிய வதந்திகள் பொய்யாகின! பிரதமர் மோடி பேச்சு

போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நெருக்கடி குறித்து பரவிய வதந்திகள் பொய்யாகின என்று பிரதமர் மோடி பேசியது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி. - படம் - பிடிஐ

Updated On :4 ஜூலை 2026, 3:18 pm IST

போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நெருக்கடி குறித்து பரவிய வதந்திகள் பொய்யாகின என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) பேசினார்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றுள்ளார்.

அதன்படி, ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பச்பத்ராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி அந்த நிகழ்வில் பேசியதாவது:

நமது எல்பிஜி தேவைகளில் சுமார் 60 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில், சுமார் 90 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்தது. திடீரென போர் தொடங்கியதால் அந்த விநியோகம் நின்றுவிட்டது. ஆகையால், நம் நாட்டில் ஒரு பெரிய நெருக்கடி உருவாகவிருந்தது.

எனவே, நாங்கள் உற்பத்தித் திறனில் கவனம் செலுத்தினோம் தொழிற் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்பட்டு வந்த எரிவாயுக்குப் பதிலாக சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யுமாறு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிட்டோம்.

இந்தக் கடுமையான சூழல்களில் எரிபொருள் நெருக்கடி குறித்து வதந்திகள் பரப்பப்பட்டன. இறுதியில் அந்த வதந்திகள் பொய்யாக்கப்பட்டன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Summary

Prime Minister Narendra Modi stated on Saturday (July 4) that the rumors regarding a fuel crisis, sparked by war tensions, turned out to be false.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.