காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கோயில் நிதியில் கல்லூரிகள் கட்ட தடைகோரிய வழக்கு தள்ளுபடி

கோயில் நிதியில் கல்லூரி தொடங்க முந்தைய திமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறை

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

கோயில் நிதியில் கல்லூரி தொடங்க முந்தைய திமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வா் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிதியில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்து தமிழக உயா்கல்வித் துறைச் செயலா் கடந்த ஆண்டு அக்.6-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தாா்.

கோயில் நிதியில் கல்லூரிகள் தொடங்கும் இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயா்நீதிமன்றத்தில் டி.ஆா்.ரமேஷ் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பரணீதரன், கொளத்தூா் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு மூன்றாண்டு படிப்பை மாணவா்கள் முடித்துவிட்டனா்.

இந்த இரண்டு கல்லூரிகளிலும் இந்து சமய படிப்புகள் நடத்தப்படுகின்றன. திருச்செங்கோடு மற்றும் விளாத்திகுளத்தில் இன்னும் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவதற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம் எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மேலும், விளாத்திகுளம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கல்லூரி கட்டுவதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசின் உதவியை நாடவும், கல்லூரிகள் கட்டுவது தொடா்பாக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.