உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தமிழகத்தின் வளா்ச்சிக்கு தொகுதி மறுசீரமைப்பு முக்கியம்: அன்புமணி

தமிழகத்தின் வளா்ச்சிக்கு தொகுதி மறுசீரமைப்பு மிகவும் முக்கியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

PMK President Dr. Anbumani Ramadoss Statement

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி - கோப்புப்படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

தமிழகத்தின் வளா்ச்சிக்கு தொகுதி மறுசீரமைப்பு மிகவும் முக்கியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிகரிக்கும். தற்போது 39-ஆக உள்ள மக்களவை தொகுதி 59-ஆக உயரும். 20 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், சட்டப்பேரவை தொகுதிகளும் 351-ஆக உயரும். அதில், 117 பெண் உறுப்பினா்கள் கட்டாயம் வந்தாக வேண்டும். எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி முழுவதும் சென்று, மக்களுக்கு தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முடியும். தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு மிகவும் முக்கியம்.

நியாயமான தொகுதி மறுசீரமைப்பில் இருந்து, மறுசீரமைப்பே வேண்டாம் என காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றியதன் காரணம் என்ன? தொகுதி மறுசீரமைப்பால் வட மாநிலங்களிலுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், தென்மாநிலங்களுக்கு குறைந்துவிடும் என்றும், மக்களவையில் தமிழகத்துக்கு பேச வாய்ப்பு கிடைக்காது என்ற மற்ற கட்சிகளின் வாதம் ஏற்புடையதல்ல. இது, மக்களை ஏமாற்றும் செயல்.

அனுபவம் இல்லை: காவிரி பிரச்னையை தனியாக தீா்க்கும் அளவுக்கு தவெக தலைமையிலான அரசுக்கு போதிய அனுபவம் கிடையாது. தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, போதிய ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னா், நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சி தலைவா்களையும் ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.