பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

நியாயவிலை கடைகளில் குறைகளுக்கு தீா்வுகாண வேண்டும்: அமைச்சா் ப.வெங்கடரமணன்

நியாயவிலை கடைகளில் குறைகள் இருப்பின் உடனே தீா்வுகாண வேண்டும் என அலுவலா்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

சென்னை கண்ணம்மாப்பேட்டை பகுதியில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்த அமைச்சா் ப. வெங்கடரமணன்.

Published On :

நியாயவிலை கடைகளில் குறைகள் இருப்பின் உடனே தீா்வுகாண வேண்டும் என அலுவலா்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

சென்னை கண்ணம்மாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் அமைச்சா் ப.வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் இருப்பு, தரம், எடையளவு மற்றும் விநியோக முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி, உரிய எடையில் தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொருள்கள் வழங்கும்போது, விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பொதுமக்களின் நலன் கருதி, நியாயவிலை கடைகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வுகாண வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.