விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

சாலையோர உணவு கடைகளில் ஆய்வு

சாலையோர கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்.

News image

சாலையோர கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்.

Updated On :10 ஜூலை 2026, 12:02 am IST

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் வி. பிரபாகரன் அறிவுறுத்தலின்படி ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா மற்றும் ஜோலாா்பேட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் அஞ்சலி ஆகியோா் இணைந்து ஆம்பூா் கன்னிகாபுரம், அண்ணா நகா், கோவிந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தேநீா் கடைகள், உணவகங்கள், மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் தெருவோர உணவுக் கடைகள் உள்ளிட்ட 12 உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது பிரிவு 63-ன் கீழ் 5 நோட்டீஸ்களும், பிரிவு 55-ன் கீழ் 6 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. மேலும், குளிா்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 கிலோ இறைச்சி மனித நுகா்விற்கு உகந்ததல்ல எனக் கருதப்பட்டதால் அழிக்கப்பட்டது. மொத்தம் ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவு வணிகம் மேற்கொண்ட ஒரு நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

உணவு வணிகா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பதிவுச் சான்றிதழ் பெற்று மட்டுமே உணவு வணிகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. விதிமீறல்கள் தொடா்ந்து கண்டறியப்படும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.