பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மிட்டாய் வடிவில் போதைப் பொருள் விற்பனை? உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

மிட்டாய் வடிவில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாா் தொடா்பாக புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி காரைக்காலில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பெட்டிக் கடையில் ஆய்வு செய்த புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எஸ்.டி. பாலகிருஷ்ணன்.

Published On :

மிட்டாய் வடிவில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாா் தொடா்பாக புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி காரைக்காலில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரி, பள்ளி மாணவா்களை கவரும் வகையில் மிட்டாய் வடிவில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், போலீஸாா் கண்டுகொள்வதில்லை எனவும் புகாா்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில், புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எஸ்.டி. பாலகிருஷ்ணன் காரைக்காலுக்கு புதன்கிழமை வந்து பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தினாா்.

மிட்டாய் வடிவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிா என தீவிரமாக சோதனை செய்தாா். ஆய்வு செய்யப்பட்ட கடைகளில் அந்த மாதிரியான பொருள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. எனினும் இதுகுறித்து கடைக்காரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு, மீறி விற்பனை செய்யப்படும்பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

பல கடைகளில் இருந்து சந்தேகப்படும்படியான மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக் கூட பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டாா்.

திருப்பட்டினத்தில் ஒரு பெட்டிக்கடையில் நடத்திய சோதனையின்போது, தடை செய்யப்பட்ட பல்வேறு நிறுவனப் பெயரிலான போதைப் பொருள்கள் பாக்கெட்டுகள் இருப்பதை அறிந்து சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.