மாங்கனி விற்பனை செய்யுமிடங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 27 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாங்கனிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மாங்கனி இறைப்பு நாளான ஜூன் 29-ஆம் தேதி அதிகமான மாங்கனிகள் தேவை என்பதால், வியாபாரிகள் பலரும் மாங்கனிகளை அதிகளவு வரவழைத்துள்ளனா்.
இந்நிலையில், புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையியிலிருந்து உணவுப் பொருளில் கலப்படத்தை ஆய்வு செய்யும் தொழில்நுட்பவியலாளா் சுரேஷ் தலைமையினான குழுவினா் காரைக்கால் வந்து பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். புதுவை நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் சிவகுமாா் மற்றும் அமைப்பினா், புதுவை உணவுப் பாதுகாப்பு துறை ஆய்வாளருக்கு ஆதரவாக செயல்பட்டனா்.
காா்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா, ரசாயன ஸ்பிரே பயன்படுத்தப்பட்டுள்ளதா என மாங்கனிகளை ஆய்வு செய்தனா். சந்தேகத்துக்கிடமான கடைகளில் இருந்து மாங்கனிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனா்.
ஆய்வுக்கு எடுத்துள்ள கனிகள் ஆய்வகத்தில் உரிய முறையில் பரிசோதிக்கப்படும். செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது உறுதியானால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








