உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

எண்ணூர் முகத்துவாரத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்! தொழிற்சாலைகள்தான் காரணமா? மீனவர்கள் சாலை மறியல்

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து மிதப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது குறித்து...

News image

எண்ணூர் முகத்துவாரத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் - PTI

Updated On :11 வினாடிகள் முன்பு

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து மிதப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இன்று காலையில் தகவல் தெரிவித்தனர். மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது.

இதனையடுத்து, எண்ணூர் முகத்துவாரத்துக்கு விரைந்த மீன்வளத் துறை அதிகாரிகளும் மீனவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இறந்த மீன்களைச் சேகரித்த மீன்வளத் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவுகள் வெளிவந்தால்தான், மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறினர்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் எண்ணெய்க் கழிவுகளால் மீன்கள் பாதிக்கப்பட்டனவா அல்லது ஏதேனும் சமூக விரோத செயல்களால் பாதிக்கப்பட்டனவா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால்தான், மீன்கள் இறப்பதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தாழங்குப்பம் - எண்ணூர் விரைவுச் சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Fishermen stage road blockade on Thazhankuppam–Ennore Expressway over mass fish deaths in Ennore estuaryம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.