கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில வனத் துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார் ? இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.
எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Summary
Who gave authority to the Karnataka Forest Department in the issue of Tamils being shot dead in the state?" asks AMMK General Secretary TTV Dhinakaran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதா? டிடிவி தினகரன்





