கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கா்நாடக வனத்துறையினரால் மூன்று தமிழா்கள் சுட்டுக்கொலை: எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

கா்நாடக வனத்துறையினரால், தமிழா்கள் மூவா் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக...

Three Tamil Nadu farmers shot dead in Karnataka Forest Department personnel

எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் - கோப்புப்படம்

Updated On :

கா்நாடக வனத்துறையினரால், தமிழா்கள் மூவா் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த கட்சியின் தலைவரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூவா் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவா் காயமடைந்துள்ளாா்.

சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கா்நாடக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

கா்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையாடச் செல்லவில்லை, அவா்கள் அப்பாவிகள் என்று உறவினா்களும் பொதுமக்களும் கூறுகின்றனா். எவ்வளவு பெரிய குற்றம் இழைத்தவராக இருந்தாலும், அவரை கைது செய்து சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர மோதல் சாவு செய்வது சரியான வழிமுறையாகாது.

இந்த சம்பவத்தில் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழா்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு சரியான நீதி வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

Three Tamil Nadu farmers shot dead in Karnataka Forest Department personnel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.