ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார்

முன்னாள் சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீரர் மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார்.

மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் - DNS

Published On :

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீரர் மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் திங்கட்கிழமை (ஆக. 17) மாலை காலமானார்.

மறைந்த ஜான் செல்வகுமார் பாண்டியனுக்கு வயது 67. இவர் காரைக்காலில் இருந்து காரில் தஞ்சாவூர் திரும்பும்போது நாகப்பட்டினம் அருகே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக அவருடைய சகோதரர் ஜோதி பாண்டியன் தெரிவிக்கிறார்.

தஞ்சாவூர் தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பொழுதே தமிழ்நாடு ஜூனியர் ஸ்டேட் (Junior state) அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தமிழ்நாடு ஜூனியர் ஸ்டேட் அணிக்கு விளையாடினார்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் படிக்கும்போது ஜூனியர் இந்தியா அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்பு தஞ்சாவூர் பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் படிக்கும் போது மெட்ராஸ் யூனிவர்சிட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஐந்து முறை பல்கலைக்கழக அணியில் இடம் பெற்றார்.

பூண்டி கல்லூரியில் படிக்கும் பொழுது தமிழ்நாடு ஆடவர் அணிக்காகவும் விளையாடத் தொடங்கினார். தமிழ்நாடு ஆடவர் அணியில் பல வருடங்கள் அவர் இடம் பெற்றார்.

பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது 1985-ல் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

மயக்க மருந்து நிபுணரான மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தன் சொந்த ஊரான தஞ்சாவூரில் வசித்து வந்தார்.

Summary

John Selvakumar Pandian has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.