FOLLOW US

ON GOOGLE DISCOVER

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

முதல்வரின் மருத்துவ காப்பீடு: ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்வு! - முதல்வர் விஜய்

மருத்துவ காப்பீடு தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம்-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 10:49 am IST

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்குத் தற்போது உள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும்.

திருநங்கையர்களுக்கான மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல், துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.

7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்சி. செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்யைத் தடுக்கவும் தரமான சிகிச்சையளிக்கவும், முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ரூ. 667.44 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ரூ. 471.80 கோடி மதிப்பீட்டில் ஜிபிளஸ்14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். மேலும் 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும்” என்றார்.

Summary

Chief Minister Vijay announced in the Legislative Assembly today (August 19) that the Chief Minister's medical insurance scheme coverage would be raised from ₹5 lakh to ₹25 lakh per year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.