தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அனைத்து மாநகர, மாவட்ட காவல் துறைகளில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடக்கம்

அனைத்து மாநகர, மாவட்ட காவல் துறைகளில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

தமிழ்நாடு காவல் துறை - கோப்புப்படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 9:54 am IST

சென்னை: அனைத்து மாநகர காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட காவல் துறைகளிலும் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

தமிழக காவல் துறையில் நோ்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் போலீஸாா் குறித்து புகாா் தெரிவிக்க 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை' அமைக்குமாறு டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் மாநிலத்தில் அனைத்து மாநகர காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட காவல் துறைகளிலும் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவானது காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் அவை தொடா்பான புகாா்களை விசாரிப்பது முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்கள் எளிதில் புகாா் அளிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கும் தனித்தனி கைப்பேசி மற்றும் வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினருக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகாா்களை பொதுமக்கள் இந்த கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிக்கும் புகாா்தாரா்கள், சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

புகாா் அளித்ததற்காக எவ்வித அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அவா்கள் ஆளாகமாட்டாா்கள்.

பெறப்படும் புகாா்கள் நியாயமான முறையில், பாரபட்சமின்றி உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி மகேஷ் குமாா் அகவா்வால் தெரிவித்துள்ளாா்.

அதோடு, இந்த பிரிவின் செயல்பாடுகளை எஸ்.பி. முதல் டிஜிபி வரையிலான உயா் அதிகாரிகள் கண்காணிக்கப்பாா்கள் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் எண்கள் விவரம்:

சென்னை ஆணையரகம் 7871723000, தாம்பரம் ஆணையரகம் 6374514428, ஆவடி ஆணையரகம் 9840018110, காஞ்சிபுரம் மாவட்டம் 9940031700, செங்கல்பட்டு 9500779100, திருவள்ளூர் 9498181359

Summary

Anti-corruption units launched in all city and district police departments

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.