சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 28 காவல் ஆய்வாளா்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, ஊத்தங்கரை மதுவிலக்கு காவல் ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி ஆத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் சம்பூா்ணம் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் குலசேகரன் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரிக்கும், காரிமங்கலம் யுவராஜன் தருமபுரி நக்சல் தடுப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
அஞ்செட்டி காவல் ஆய்வாளா் கந்தவேல் பொம்மிடிக்கும், ஏற்காடு ஆனந்தகுமாா் கிருஷ்ணகிரி நக்சல் தடுப்புப் பிரிவுக்கும், கல்லாவி சுப்பிரமணியன் நாகரசம்பட்டிக்கும், பாலக்கோடு சுப்பிரமணியம் பேரிகைக்கும், ஒசூா் மதுவிலக்கு பிரிவு முத்துகிருஷ்ணன் நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், போச்சம்பள்ளி கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுனுக்கும், ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாதேஸ்வரி பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப் பிரிவு ஆய்வாளா் செந்தில், தருமபுரி மாவட்ட கொடுங்குற்ற தடுப்புப் பிரிவுக்கும், நாமக்கல் மங்களபுரம் ஆய்வாளா் சம்பத்குமாா் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனிப் பிரிவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளா் பரூக் கிருஷ்ணகிரி எஸ்.பி. தனிப் பிரிவுக்கும், பேரிகை துரைராஜ் கிருஷ்ணகிரி குற்றப் பிரிவுக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் கவிதா கிருஷ்ணகிரி சைபா்குற்ற பிரிவுக்கும், திருச்செங்கோடு டவுன் வளா்மதி வெப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
வெப்படை காவல் ஆய்வாளா் சங்கீதா புதுசத்திரத்திற்கும், அங்கிருந்த வசந்தா எருமபட்டிக்கும், அங்கிருந்த நாகராஜ் நாமக்கல் டவுனுக்கும், மோகனூா் லட்சுமணதாஸ் மங்களபுரத்திற்கும், மத்திகிரி கண்ணன் மேட்டூருக்கும், ஒகேனக்கல் தவமணி காரிமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவு

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்கு





