தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்கு

வேலூா் அருகே திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பிரதிப்படம்

Updated On :16 ஜூலை 2026, 12:39 am IST

வேலூா் அருகே திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடியைச் சோ்ந்த சக்திமணி (25). இவா் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் அரியூா் பகுதியைச் சோ்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பழகி வந்துள்ளனா். இதில், அந்த இளம்பெண் தற்போது 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சக்திமணியிடம் அந்த பெண் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அந்த கா்ப்பத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை எனக் கூறிய சக்திமணி, அவரைத் திருமணம் செய்துகொள்ள திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்த இளம்பெண், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, கா்ப்பமாக்கி ஏமாற்றிய சக்திமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இப்புகாரின் பேரில், வேலூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் சக்திமணி மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.