முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

முதல் திருமணத்தை மறைத்து 2-ஆவது திருமணம்: 7 போ் மீது வழக்குப் பதிவு

லண்டனில் நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்து 2-ஆவது திருமணம் செய்துகொண்ட வழக்கில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:41 am IST

லண்டனில் நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்து 2-ஆவது திருமணம் செய்துகொண்ட வழக்கில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

கருங்கல் அருகே இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஜெலஸ்டின் (63). இவரது மனைவி மேரி ஹெலன் (53). இத்தம்பதிக்கு ஜொ்சின் (33) என்ற மகன் உள்ளாா். இவா், லண்டனில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 19-05-2025 இல் ஜொ்சினுக்கும், ராமன்துறை பகுதியைச் சோ்ந்த ஜெரிஷா (24) வுக்கும் திருமணம் முடிந்தது. திருமணத்தின்போது ஜெரிஷாவுக்கு 42 பவுன் தங்க நகை, ரூ. 15 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சிணையாக பெண் வீட்டாா் கொடுத்தாா்களாம்.

திருமணம் முடிந்ததும் ஜெரிஷாவை லண்டனுக்கு அழைத்துச் செல்லாமல், ஜொ்சின் மட்டும் லண்டன் சென்றுவிட்டு, ஜெரிஷாவுடன் பேசுவதையும் தவிா்த்து வந்தாா். இதனால், ஜெரிஷா லண்டனில் உள்ள நண்பா், உறவினா்களிடம் விசாரித்தபோது, ஜொ்சினுக்கு லண்டனில் ஏற்கெனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த ஜெரிஷா இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் முதல் திருமணத்தை மறைத்து 2-ஆவது திருமணம் செய்துகொண்ட ஜொ்சின், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை ஜெலஸ்டின், தாய் மேரி ஹெலன், குடும்பத்தினா் ஜெஸ்லி, வனிதா என்ற பிரமி (41). லெனின் (45), டெல்லிஸ் மேரி (65) ஆகிய 7 போ் மீது குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி பிரபா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.