FOLLOW US

ON GOOGLE DISCOVER

பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு! ஆந்திரம், கர்நாடக முதல்வர்கள் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு ஆந்திரம் மற்றும் கர்நாடக முதல்வர்கள் இரங்கல்...

sowcar janaki demise

சௌகார் ஜானகியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவகுமார் இரங்கல்... - எக்ஸ்

Published On :21 ஆகஸ்ட் 2026, 7:53 pm IST

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று (ஆக. 21) மதியம் காலமானார்.

இதனையடுத்து, சௌகார் ஜானகியின் மறைவுக்கு நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகின் பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, ஆந்திர முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“மூத்த நடிகையும் பாடகியுமான சௌகார் ஜானகியின் திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 400-க்கும் அதிகமான படங்களில் நடித்து, எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சௌகார் ஜானகி உடல்ரீதியாக நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நடித்த கதாபாத்திரங்களின் மூலம் நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“இந்தியத் திரையுலகின் மூத்த நடிகையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சங்கரமஞ்சி ஜானகி அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை வென்ற அவர் கலை ஆர்வலர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார். சௌகார் ஜானகியின் மறைவால், திரைப்படத் துறையின் ஒரு முக்கிய இணைப்பு அறுந்துபோனது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சௌகார் ஜானகியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Chief Ministers of Andhra Pradesh and Karnataka have expressed their condolences over the passing of veteran actress Sowcar Janaki.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.