எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு பற்றி...

Sowcar Janaki

செளகார் ஜானகி - x

Published On :

சென்னையில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆக. 21) காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை செளகார் ஜானகி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செளகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1950ஆம் ஆண்டு, ’ஷாவுகாரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான செளகார் ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்.டி. ராமா ராவ், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட தென்னிந்திய ஜாம்பவான்களுக்கு ஜோடியாக செளகார் ஜானகி நடித்துள்ளார்.

புதிய பறவை (1964), நீர்க்குமிழி (1965), மகாகவி காளிதாஸ் (1966), எதிர் நீச்சல் (1968), இரு கொடுகள் (1969), உயர்ந்த மனிதன் (1968), காவிய ராவணம் (1970), தில்லு முல்லு (1981), வெற்றி விழா (1989), தேவி (1999), ஹே ராம் (2000) உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு புகழ் சேர்த்தன.

தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் செளகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார்.

Summary

Veteran actress Sowcar Janaki has passed away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.