
அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி....

கமல்ஹாசன் - கோப்புப் படம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆக. 21) காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை செளகார் ஜானகி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செளகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Kamal Haasan expresses condolences over the passing of veteran actress Sowcar Janaki.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







