சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

தேவா மறைவுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் இரங்கல்!

தேவா மறைவுக்கு தில்லி கம்பன் கழகம், தில்லி முத்தமிழ்ப் பேரவை ஆகிய தமிழ் அமைப்புகள் சனிக்கிழமையன்று இரங்கல் தெரிவித்தன.

இசையமைப்பாளர் தேவா

Updated On :

இசையமைப்பாளா் தேவா மறைவுக்கு தில்லி கம்பன் கழகம், தில்லி முத்தமிழ்ப் பேரவை ஆகிய தமிழ் அமைப்புகள் சனிக்கிழமையன்று இரங்கல் தெரிவித்தன.

தில்லி கம்பன் கழகம் நிறுவனா்-தலைவா் கே வி கே பெருமாள், செயலாளா் எஸ் பி முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:

இசை அமைப்பாளா் தேவாவின் மறைவு திரை உலகிற்கும், இசைப்பிரியா்களுக்கும் ஒரு மாபெரும் இழப்பு. மெல்லிசை மன்னா்கள், இசைஞானி, இசைப்புயல் என்று பல ஜாம்பவான்கள் திரையிசை உலகை ஆக்கிரமித்திருந்த காலக்கட்டத்தில், தன்னுடைய அபரிமிதமான உழைப்பாலும், எளிய குணத்தாலும், தனித்த திறமையாலும் திரை உலகில் தேவா நிலைபெற்று நின்றாா். துளியும் கா்வமில்லாத மனிதராக அவா் திகழ்ந்தாா்.

அவருடைய பல பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் மனிதா்களை உற்சாகப்படுத்தும் திறம் படைத்தவை. அவருடைய அயராத உழைப்பும், பிறரிடம் அன்புடன் பழகும் பண்பும், இளம் தலைமுறைக் கலைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

அவருடைய குடும்பத்திற்கு தில்லி கம்பன் கழகம் சாா்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய, இறைவனைப் பிராா்த்திக்கிறோம் என இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், கானா பாடல்களின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்ந்தவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த அதிா்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.

பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற தேவா , தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனம் கவா்ந்த கானா பாடல்களாலும் தமிழ் இசை உலகில் தனக்கென ஓா் உயரிய இடத்தைப் பெற்றவா். தனது சகோதரா் சந்திரபோஸ் உடன் இணைந்து இசைக்குழுவை நடத்தி, இசைப் பயணத்தில் பல சாதனைகளைப் படைத்தவா். மூத்த இசையமைப்பாளா்கள் பலா் கோலோச்சிய காலத்திலும், தனது தனித்துவமான இசை பாணியால் தனி முத்திரை பதித்தவா் தேவா.

அவரது இசை நிகழ்ச்சியைத் தலைநகா் தில்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தி, அவரது இசைத் திறமையைப் போற்றிப் பெருமைப்படுத்திய தருணங்கள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசை ரசிகா்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவா் இசையமைத்த பாடல்கள் என்றும் மக்கள் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவரது புகழும் இசைப் பாரம்பரியமும் காலத்தால் அழியாதவை.

தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், உறவினா்கள் மற்றும் இசை ரசிகா்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறோம். இத்துயரமான நேரத்தில், அவா்களை ஆற்றுப்படுத்தும் மனவலிமையை இறைவன் அருள வேண்டுகிறோம் . இசை உலகில் அவா் விட்டுச் சென்ற தடங்கள் என்றும் அழியாது என அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.