
உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை உயர்த்துவோம்! முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து....

தமிழக முதல்வர் விஜய் - dipr
உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை உயர்த்துவோம் என்று சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1693 ஆம் ஆண்டு ஆக. 22 ஆம் தேதி மெட்ராஸ் உருவாகியதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக. 22 ஆம் தேதி சென்னை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.
அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!" என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
வரலாறà¯à®±à®¿à®©à¯ தà®à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®®à®¨à¯à®¤à¯à®®à¯, நவà¯à®©à®¤à¯à®¤à®¿à®©à¯ வà¯à®à®¤à¯à®¤à¯à®à¯ பயணிதà¯à®¤à¯, தமிழà®à®¤à¯à®¤à®¿à®©à¯ வà¯à®±à¯à®±à®¿à®¤à¯ தலà¯à®¨à®à®°à®¾à®à®¤à¯ திà®à®´à¯à®®à¯ நம௠à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®©à¯ பà¯à®°à¯à®®à¯à®¯à¯à®ªà¯ பà¯à®±à¯à®±à¯à®®à¯ à®à®¨à¯à®¨à®©à¯à®©à®¾à®³à®¿à®²à¯ à®à®©à¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à®¤à¯ à®à®©à®¿à®¯ âà®à¯à®©à¯à®©à¯ நாளà¯â நலà¯à®µà®¾à®´à¯à®¤à¯à®¤à¯à®à®³à¯!
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2026
வரலாறà¯à®±à¯à®à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà¯à®®à¯, பணà¯à®ªà®¾à®à¯à®à¯à®ªà¯ பà¯à®°à¯à®®à¯à®¯à¯à®®à¯, à®à®²à¯à®µà®¿, மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯,⦠pic.twitter.com/8CNCLndNO9
Summary
Chief Minister Vijay extends his best wishes for chennai day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






