தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

எண்ணூரில் மீன்கள் இறந்ததற்கான காரணம் என்ன? சுற்றுச்சூழல் அமைச்சா் ராஜீவ் விளக்கம்

எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான மீன்கள் அண்மையில் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணமல்ல

Dead fish found

கோப்புப் படம் - படம் - எக்ஸ்

Published On :

எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான மீன்கள் அண்மையில் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணமல்ல; மனிதக் கழிவுகள்தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து பேரவையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தை வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா்.

அதன் மீது பேசிய தங்கம் தென்னரசு (திமுக), கணேஷ் (பாமக) உள்ளிட்டோா் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா் ராஜீவ், ‘எண்ணூா் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து கிடந்தது குறித்து முகத்துவாரம், ரயில்வே பாலம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறந்ததற்கு முதன்மைக் காரணம். இதையடுத்து, 2,150 கிலோ இறந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு 10 நாளில் விரிவான அறிக்கை பெறப்படும்.

மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவுநீா் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.