
எந்த ஆட்சி குறித்தும் பேசுவதற்கு விரும்பவில்லை: ராம்நாத் கோவிந்த்
எந்த ஆட்சி குறித்தும் பேசுவதற்கு விரும்பவில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருப்பது குறித்து...

ராம்நாத் கோவிந்த் - கோப்புப் படம்
திருச்சி: எந்த ஆட்சி குறித்தும் பேசுவதற்கு விரும்பவில்லை; அரசியலில் இருந்து விலகியே இருக்கிறேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வந்துள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சி வந்த அவர், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். மகிழ்ச்சி அடைகிறேன்.
பேரரசர்கள் என்பவா் சாதி, மதம், சமூகப் பிரிவு, பிராந்தியம், மொழி ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவா். எந்த ஒரு பேரரசரையும் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி போன்றவற்றால் அடையாளப்படுத்தக் கூடாது. பேரரசர்கள் என்பவா் அனைவருக்கும் பொதுவானவா். அவர்கள் நமக்கான வழிகாட்டிகள். இன்றைய சந்ததியார்கள் நன்றாக இருப்பதற்கு, அவர்களது வகுத்த வழிகாட்டல்களே முக்கிய காரணம்.
பேரரசர் முத்தரையரின் ஆசீா்வாதத்துடனும், நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவுடனும் நான் 5 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். அதற்கு அவர்களது ஆசீர்வாதமே காரணம் என நம்புகிறேன்.
அதற்கான பெருமை தமிழா்கள், வடஇந்தியா்கள் உள்ளிட்ட இந்தியா்கள் அனைவரையும் சாரும். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் ஒற்றுமையும், ஆதரவுமே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பலமாகும். அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் எனது நண்பர். அவரைப் போன்று தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னைப் பொருத்தவரை நாம் அனைவரும் இந்தியா்களே. இந்தியா்கள் அனைவரும் ஒன்றுபட்டவா்களாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
மேலும், தற்போதைய அரசு குறித்து பேசுவதற்கோ, கருத்து தெரிவிக்கவோ நான் இங்கு விரும்பவில்லை. அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதும் எனது நோக்கம் அல்ல. அரசியலில் இருந்து நான் விலகி இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில், திருவானைக்கோவில் ஜம்புகேசுவரா் திருக்கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில்களுக்கு மனைவி, மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
Summary
I do not wish to speak about any government: Ram Nath Kovind
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







