
எம்ஜிஆருக்கு பிறகு விஜய்க்காக மக்கள் கண்ணீர் விட்டனர்: அமைச்சர் கீர்த்தனா
எம்ஜிஆருக்கு பிறகு முதல்வர் விஜய்க்காக மக்கள் கண்ணீர் விடுவதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு முதல்வர் விஜய்க்காக மக்கள் கண்ணீர் விடுவதாக அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற தவெகவின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது, "தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் விமர்சனங்கள், இப்போதும் விமர்சனங்கள். மக்களுக்குச் சேவையாற்ற விடக் கூடாது என எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வேலையே.
தொலைக்காட்சிகளில் நாடகங்கள் பார்த்த காலம்போய், இன்று சட்டப்பேரவை நேரலையைத்தான் பார்க்கின்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள், மக்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களும் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பப்படுகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையை நேரலையில் ஒளிபரப்பக் கூடாது என சிலர் அழுகின்றனர். சட்டப்பேரவையை நேரலையில் ஒளிபரப்புவோம் என அவர்களும் (திமுக) 2021 தேர்தலில் வாக்குறுதியில் கூறியிருந்தனர். ஆனால், இன்றுவரையில் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
அதே நேரம் சட்டப்பேரவையில் அவர்களின் முகத் திரையை நாம் காட்டுவது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒட்டுமொத்த கட்சியையும் அழித்து விடுவோம் என அவர்கள் பயப்படுகின்றனர்.
ஆட்சிக்கு வருவதாக முன்னதாக, தவெக 2 - 3 சதவிகிதம்தான் வாங்குவோம் என பலரும் விமர்சித்தனர். ஆனால், இன்று ஒரே கட்சியாக ஆட்சியைப் பிடித்து, அவர் (விஜய்) முதல்வராக சுதந்திர தினத்தில் கொடியேற்றினார். எம்ஜிஆருக்கு பிறகு இவருக்காகத்தான் மக்கள் கண்ணீர் விட்டனர்" என்று தெரிவித்தார்.
Summary
Opposition members are whining because Assembly proceedings are being broadcast live, says Minister Keerthana
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



