தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? இபிஎஸ் கேள்வி!

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது குறித்து...

eps

எடப்பாடி பழனிசாமி - படம்: சட்டப்பேரவை

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:33 pm IST

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் வைவிடப்பட்டது தொடர்பாக, விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ”பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 90 சதவிகித நிலம் கையகப்படுத்தப்பட்டது, கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?

நிலத்திற்கு கொடுத்த இழப்பீட்டை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது. இது தொடர்பாக அரசின் விளக்கம் தேவை” என்றார்.

இதற்குப் பதலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “40% நிலங்கள் கையப்படுத்தப்பட்டுள்ளது, ஏகனாபுரம் தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் 1% சதவிகிதம்கூட நிலங்கள் கையப்படுத்தப்படவில்லை.

வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்கள்தான், கையகப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூரில் வசிக்கும் மக்களிடம் நிலம் கையகப்படுத்தவில்லை. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலம் குறித்து முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார்” என்றார்.

இது குறித்து ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ”பரந்தூர் விமான நிலையமா? இல்லை விவசாயிகள் கண்ணீரா? என்றால் எங்கள் முதல்வர் விவசாயிகள் கண்ணீர் பக்கம்தான் நிற்பார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இரண்டு போகம் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் பக்கம் நிற்பதற்காகத்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது. இதில் எங்களுக்கு எவ்வித அரசியல் உள்ளீடும் இல்லை.

பரந்தூர் விமான நிலைய முழு திட்ட விவரம் வருவதற்கு முன்பே, ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், பரந்தூரைச் சுற்றி நிலம் வாங்கிய மோசடி நடந்துள்ளது.

5 ஆண்டுகள் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் தயார். உங்களைவிட 10 மடங்கு பொருளாதாரம் வளர்ந்திருக்கும். ஊழல் இல்லாத ஆட்சியை எங்கள் முதல்வர் கொடுப்பார்” என்றார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has questioned in the Legislative Assembly what is going to be done with the land acquired for the Parandur airport project.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.