திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பற்றி...

Roopan

மாரி என்ற ரூபன் - Dinamani

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:16 pm IST

திருவள்ளுர் - திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை காரில் வந்த மர்ம கும்பல் பட்டப்பகலில் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற ரூபன் (33). இவர் உள்ளூர் பகுதியில் மின்சார வாரியத்துறை ஊழியர்களிடம் தகராறு செய்த வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக வெங்கல் காவல் நிலையத்தில் இவர் ஆஜராகி கையொப்பம் போட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று காவல் நிலையத்துக்கு கையொப்பம் போட்டுவிட்டு தனது நண்பர் வெங்கடேஷ் உடன் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த போது அவரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர்.

அப்போது தப்பிய அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையான மாரி பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Thiruvallur: Youth hacked to death after signing in at the police station!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.