தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

‘பரந்தூரில் விவசாய நிலத்தை திருப்பி ஒப்படைத்திடுக’ - பெ.சண்முகம் கோரிக்கை

பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 11:51 am IST

பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தன.

விமான நிலையம் திட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 1,200 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவக்கிய பின்னர் முதல் களப்பணியாக ஏகநாதபுரம் போராட்ட களத்திற்கு சென்ற விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக. 25) மாலை சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, “பரத்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது.

சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

CPI(M) State Secretary P. Shanmugam has stated that the lands acquired for the Parandur airport must be returned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.