‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஈரோடு மாவட்டத்தில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 4 பேர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 4 பேர் கைது குறித்து...

Arrested

கைது - கோப்புப்படம்

Published On :4 வினாடிகள் முன்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, திங்கள்கிழமை மாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கடம்பூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட குத்தியாலத்தூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ​​புது தொட்டி காலனியை சோ்ந்த மதேஷ் (41), ரங்கன் (41), சடையப்பன் (31) மற்றும் காரி (68) ஆகிய நான்கு பேர் ஒரு சாக்குப்பையுடன் வனப்பாதை வழியாக நடந்து வந்தனர்.

வனத்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவா்கள் வைத்திருந்த சாக்குப்பையைச் சோதனையிட்டபோது, ​​அதில் வெட்டப்பட்ட அரிய வகை மான் இனமான சருமானின் இறைச்சித் துண்டுகளும், வேட்டைக்குத் பயன்படுத்தப்பட்ட சில பொருள்களும் இருந்ததை கண்டுபிடித்தனா்.

அவர்களிடம் வனத் துறையினா் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வனப்பகுதியில் மானைக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அந்த நான்கு பேரையும் கைது செய்த வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்து, வேட்டைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செவ்வாய்க்கிழமை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்; அவர்களை அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

Summary

Four poachers were arrested for allegedly killing a deer at Sathyamangalam Tiger Reserve in this district, forest officials said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.