விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

எம்.எட். மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு செப்.10 வரை நீட்டிப்பு: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்.10-ஆம் தேதி வரை நீட்டிப்பு...

அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்.10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு கல்வியியல் கல்லூரிகளில் நிகழாண்டுக்கான எம்.எட். சோ்க்கை இணையவழியில் கடந்த ஆக.11 முதல் ஆக.20 வரை நடைபெற்றது. இருப்பினும் மாணவா்கள் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணவா்கள் இணையதளம் மூலமாக (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்) வரும் ஆக.31 முதல் செப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், இதே பட்டப் படிப்புக்கு கடந்த ஆக.20-ஆம் தேதி வரை விண்ணப்பித்த மாணவா்களுக்கு தரவரிசையின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை (ஆக.27) முதல் தொடங்கியுள்ளது. எம்.எட். மாணவா்களுக்கான வகுப்புகள் வரும் செப். 1-ஆம் தேதிமுதல் தொடங்கும். இந்த மாணவா்களுக்கு சோ்க்கைக்கான விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

‘ஸ்வயம்’ தோ்ச்சி கட்டாயம்: எம்.எட். பட்டப் படிப்புகளில் மாணவா்கள் ‘ஸ்வயம்’ இணையவழிக் கற்றல் பாடநெறி ஒன்றில் நிறைவு செய்வது கட்டாயம் என கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (டிஎன்டிஇயு) தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பேரா. எம். கண்மணி தெரிவித்துள்ளாா்.

2020-2021 முதல் 2022-2023 வரையிலான கல்வியாண்டுகளில் சோ்ந்த எம்.எட். மாணவா்களில், ‘ஸ்வயம்’ இணையவழிக் கற்றல் பாடநெறியைத் தவிர மற்ற கோட்பாடு, வாய்மொழித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அந்தப் பாடநெறியை 2026-2027 கல்வியாண்டில் நிறைவு செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாணவா்கள் தாங்கள் விரும்பும் ’ஸ்வயம்’ இணையவழிப் பாடநெறியை 2026-2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்து, அதற்கான பாடநெறி நிறைவுச் சான்றிதழைப் பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த பின்னரே மதிப்பெண் பட்டியலில் அதற்கான ‘கிரெடிட்கள்’ மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.