
அடுத்த பிரதமர் யார்? மோடி வரிசையில் முதல்வர் விஜய்! கருத்துக் கணிப்பில் தகவல்!
இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் வரிசையில் தமிழக முதல்வர் விஜய் இடம்பிடித்துள்ளது குறித்து...

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி - (கோப்புப்படம்)
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் பதவி வகிக்க வேண்டும் என சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மூன்றாம் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில், தவெக அரசு அமைந்து 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த பிரதமருக்கான பட்டியலில் முதல்வர் விஜய்யின் பெயர் இடம்பிடித்துள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி (8.5%) மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதல்வர் விஜய் 9.2% ஆதரவைப் பெற்றுள்ளார்.
இத்துடன், இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 48.7% பேர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கும், 27.1% பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் பிரதமராகப் பதவி வகிக்காதது நீண்டகால அரசியல் பேச்சாக இருக்கும் சூழலில், பட்டியலில் முதல்வர் விஜய்யின் பெயர் முன்னணியில் இடம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னதாக, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான காலத்தில், சி வோட்டர் நிறுவனம் 25,184 பேரிடம் நேரடியாக நடத்திய கருத்துக் கணிப்புகள் மற்றும் கடந்த 6 மாதங்களில் சேகரிக்கப்பட்ட 91,795 நேர்காணல்களின் தரவுகள் மூலம் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A C-Voter opinion poll indicates that TN CM Vijay has secured third place regarding who should become India's next Prime Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






