
அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே நிறைவடைந்த சட்டப்பேரவை!
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே நிறைவடைந்தது குறித்து...
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
சட்டப்பேரவையில் அமைச்சர்களின் பதிலுரை ஏதுமில்லாமலேயே இன்று (ஆக. 27) அவை நிறைவடைந்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தைக் கடந்து, பல்வேறு விவாதங்கள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், அமைச்சர்களின் பதிலுரை ஏதுமில்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.
இதனால், நாளை (ஆக. 28) நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய 3 துறைகளின் அமைச்சர்களும் பதிலுரை வழங்குவார்கள். மேலும், நாளைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்காது.
Summary
Tamilnadu Legislative Assembly concludes without ministers' responses
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





